திங்கள், 21 அக்டோபர், 2013

நிலக்கரி ஊழல் - பெருந்தொழில் நிறுவனங்களின் கவலையும் மான்டெக் சிங் அலுவாலியாவின் நியதியும்

இந்தியாவில் மிகப்பெரும் கொள்ளைகள் அரசு-அலுவலர்-பெருந்தொழில் நிறுவங்களின் கூட்டணியால் 1991 முதல் அரங்கேறி வருகிறது.

முதன்முதலாக ஆட்சி செய்த அரசியலர் சிலர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். பெருந்தொழில் நிறுவனர்கள் சிலரும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.அதேபோல அலுவலரும் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.  

இதில் கூட்டு என்பது இருந்து வந்தாலும் இவை "சமத்துவம்" இல்லாத கொள்ளைகள். அதானால் தான் ஒருவகை குற்றவாளிகள்  மட்டுமே தண்டிக்கப்பட்டு வந்தனர். 

இப்பொழுதுதான் முதன்முதாலாக இருவிதத்தினரை, தவறு செய்திருந்தால், குற்றவாளிகளாக்கும் நடவடிக்கை உச்சநீதி மன்றத்தால் முன்னுக்கு எடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதும் ஒருதரப்பு விட்டுவைக்கப்பட்டுள்ளது -அரசு- என்பது வேதனை அளித்தாலும் நாகரீக வளர்ச்சின் வேகத்தில் அவர்களும் இதனுள் அடங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது திண்ணம்.

இந்நிலையில் மூவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
- பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வது முடங்கிப் போகும்.
- அரசு செய்தது அனைத்தும் சரியானது.
- அலுவலர் எவரும் துணிவான முடிவுகளை எடுக்கத் தயங்குவர்.

இந்நிலையில், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி, பணவீக்கம், வறுமை,  என்பனவை பற்றி தெளிவுறாத திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தெளிவான நேர்மையான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

2G ஒதுக்கீடு, சுரங்க ஒதுக்கீடு போன்றவை வளர்ச்சின் தேவையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள்.  நடந்தவற்றிலிருந்து பாடம் கற்று உள்ளோம். எனவே, இவை போன்று இனிமேல் நடக்காது என்று மிகத் தெளிவாக பேட்டி கொடுத்துள்ளார். 

மேலும், பெருந்தொழில் நிறுவனங்கள் மத்தியில் அச்சம் நிகழுவதாகவும் அவர்கள் செய்த செயல்களுக்காக தண்டிக்கப்படும் நிலை வந்தால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்றும் தெரிவித்துள்ளார். 

அதானால், அரசு தொழில் அதிபர்களுக்கு, அரசு அவர்களின் செயல்பாடுகளை நம்பினால், அவர்களின் செயல்களை ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்தார். அதேபோல அலுவலர்களின் செயல்பாடுகளில் அரசு நம்பிக்கை கொள்ளுமானால் அவர்களையும் கைவிடாது என்று கூறினார். 

எதிலிருந்து காப்பாற்றும்?  எதை எந்த செயலைத் தடுக்கும்? ஏன் கைவிடாது? என்பது குறிப்பிடவில்லை என்றாலும் அது நீதிவிசாரணையை என்பது தெளிவு.

எல்லாவித இடையூறுகளையும் கடந்து சிறப்பாக சேவையாற்றிய பல்வேறு அரசு அலுவலர்கள் நம் கண்முன் என்றும் அகலாமல் இருக்கின்றனர்.

அதுபோல, எவ்வித சொத்துக்களும் படிப்பும் இல்லாதவர்கள், எல்லாவித தடங்கல்களையும் மீறி முன்னேறி பெரு நிறுவங்களை உருவாக்கி இருக்கின்றனர். 

இக்கொள்ளைகள் அடித்தட்டு மக்களுக்கோ பொதுவாக எல்லாருக்குமோ எதுவும் செய்யாத நிலையில் 

தவறு செய்த இவர்களை - அரசு, அலுவலர், அதிபர்- சிறு குறையும் இல்லாமல் முழுமையாகத் தண்டித்து புதியதோர் இந்தியா உருவாகுமா?